இந்த வாரம் ரத்னகுமார் இயக்கியுள்ள `29′, ஓடிடியில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘LIK’ படம் உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
1. Series: Citadel S2 (English) Prime – May 6

Citadel
Richard Madden, Priyanka Chopra நடிப்பில் வெளியான `Citadel’ சீரிஸின் இரண்டாவது சீசன் Joe Russo இயக்கத்தில் வெளியாகிறது. இம்முறை தனக்கு வரும் ஆபத்துகளில் இருந்து மகளுடன் எப்படி நாடியா தப்புகிறார் என்பதே கதை.
2. OTT: Clika (English) Netflix – May 5

Clika
Michael Greene இயக்கியுள்ள படம் `Clika’. சாதிக்க துடிக்கும் ஓர் இசைக்கலைஞனின் பயணமே கதை.
3. Post Theatrical Digital Streaming: LIK (Tamil) Prime – May 6

LIK
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் `LIK’. 2040இல் உலகமே மிஷின் சொல்லும் ஜோடிகளை காதல் செய்யும்போது, சுயமாக ஒரு பெண் மீது காதல் கொள்ளும் இளைஞனுக்கு என்ன சிக்கல் வருகிறது என்பதே கதை.
4. Dacoit (Telugu) Prime – May 8

Dacoit
அதிவி ஷேஷ், மிருணாள் தாக்கூர் நடித்த படம் `Dacoit’. தனக்கு துரோகம் செய்த முன்னாள் காதலியை பழிவாங்க கிளம்பும் காதலனின் கதை.
5. Vaazha II (Malayalam) Jio Hotstar – May 8

Vaazha II
சவின் இயக்கத்தில் வெளியான படம் Vaazha II. முதல் பாகத்தில் இளைஞர்கள் வாழ்க்கையை சொன்னதுபோல, இந்தப் பாகத்திலும் சில பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியது படம்.
6. Bharathanatyam 2 Mohiniyattam (Malayalam) Netflix – May 8

Bharathanatyam 2 Mohiniyattam
கிருஷ்ணதாஸ் முரளி இயக்கிய படம் `Bharathanatyam 2 Mohiniyattam’. முந்தைய பாகமான `பரதநாட்டியம்’ படத்தில் இறந்துபோன பரதனுக்கு இன்னொரு குடும்பம் உள்ளது என தெரிந்துகொள்ளும் பரதனின் மூத்த மனைவியும் மகனும், இந்தப் பாகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.
7. Theatre: 29 (Tamil) – May 8

29
ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம் `29′. தான் யார் என்பதைத் தேடும் ஊர் இளைஞனின் வாழ்வில் நடப்பையே கதை.
8. Sathi Leelavathi (Telugu) – May 8

Sathi Leelavathi
லாவண்யா திரிபாதி, தேவ் மோகன் நடித்துள்ள படம் `Sathi Leelavathi’. காதல் ஜோடிக்குள் வரும் சிக்கலே கதை.
9. Godari Gattupaina (Telugu) – May 8

Godari Gattupaina
சுமந்த் பிரபாஸ் நடித்துள்ள படம் `Godari Gattupaina’. ஆட்டோ ஓட்டும் ஹீரோ, காலேஜ் மாணவி ஹீரோயின். இவர்கள் காதலைச் சோதிக்கும் ஹீரோயினின் தந்தையை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதே கதை.
10. Razor (Telugu) – May 8

Razor
ரவிபாபு இயக்கி நடித்துள்ள படம் `Razor’. ஒரு குழந்தையைக் கொல்லத் துரத்தும் வில்லன் கும்பலை எதிர்க்கும் நாயகனின் கதை.
11. Dridam (Malayalam) – May 8

Dridam
ஷேன் நிகம் நடித்துள்ள படம் `Dridam’. மலைப்பிரதேசம் ஒன்றில் பொறுப்பேற்கும் இளம் காவலதிகாரி எதிர்கொள்ளும் சவால்களே கதை.
12. Daadi Ki Shaadi (Hindi) – May 8

Daadi Ki Shaadi
ஆஷிஷ் மனோகர் இயக்கத்தில் நீத்து சிங், கபில் ஷர்மா, சாதியா கதீப் நடித்துள்ள படம் `Daadi Ki Shaadi’. பாட்டி ஒருவரின் திருமண ஏற்பாடுகள் அக்குடும்பத்தின் நபர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை காமெடியாக சொல்லும் படம்.
13. Mortal Kombat II (English) – May 8

Mortal Kombat II
Karl Urban நடித்துள்ள படம் `Mortal Kombat II’. காம்பேட் சண்டைகளில் சக்திவாய்ந்த போட்டியாளர்கள் மோதிக் கொள்வதும் யார் வெற்றியாளர் என்பதுமே கதை.
14. The Sheep Detectives (English) – May 8

The Sheep Detectives
Hugh Jackman நடிப்பில் Kyle Balda இயக்கியுள்ள படம், `The Sheep Detectives’. ஆடு மேய்ப்பர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, கொலையாளி யார் என்பதை ஆராயத் துவங்குகின்ற அவர் கண்காணிப்பில் இருந்த ஆடுகள் பற்றிய கதை.
