அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் பாதிக்கும் வகையிலான அம்சங்களை ஏற்கக் கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் பாதிக்கும் வகையிலான அம்சங்களை ஏற்கக் கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் பாதிக்கும் வகையிலான அம்சங்களை ஏற்கக் கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 12ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வதுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி, வரும் 12ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்ததுக்கும் அழைப் புவிடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவின் வேளாண் துறை பெருநிறுவனங்களிடம் இந்தியா சரணடைந்திருப்பதாக வேளாண் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

பியூஷ் கோயல்
மக்காச்சோளம், கோதுமை உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயா பீன்ஸ் எண்ணெய், ஒயின், ஸ்பிரிட் ஆகியவை இறக்குமதி செய்யப்பட உள்ளன. கால்நடைகளுக்கான சிவப்புச் சோளம் இறக்குமதி செய்வது இந்தியாவின் பால் பொருட்கள் உற்பத்தியில் பாதகத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பியாவுடனான ஒப்பந்தங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய வேளாண்மை மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஒப்பந்தத்துக்கும், மத்திய அமைச்சர் சொல்வதற்கும் இடையே முரண்கள் உள்ளது என்பதே விவசாயிகளின் கவலையாக உள்ளது.
