Skip to content

T20 W WC| 7-ஆவது முறையாக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா!

2026 மகளிர் டி20 உலகக்கோப்பையின் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் ஆனது. 20 ஓவர் மகளிர் 10ஆவது உலகக்கோப்பை

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

2026 மகளிர் டி20 உலகக்கோப்பையின் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் ஆனது.

20 ஓவர் மகளிர் 10ஆவது உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 12 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டித் தொடரில், அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட்இண்டீசை தோற்கடித்து 8-ஆவது முறையாகவும், இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 5-ஆவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதைத் தொடர்ந்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 7-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணியும், அறிமுக போட்டியில் (2009-ம் ஆண்டு) சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 2-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் விளையாடின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையடுத்து அவ்வணியின் தொடக்க வீராங்கனை ஆமி ஜோன்ஸ் (6), டேனி வியாட் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நாட் சிவர் அரைசதம் (58) விளாசினார். பிரேயா கெம்ப் (44) ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 150 ரன்கள் எடுத்தது. பின்னர், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனை பெத் மூனி (64) அரைசதம் அடித்தார். லிட்ச்பீல்டு அரைசதம் (48 ரன்கள்) 2 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார். எனினும், எலைஸ் பெர்ரி (13), கார்ட்னர் (3) ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, 7ஆவது முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு