Skip to content
LeeNews24×7
நேரலைதேடு

ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற தூத்துக்குடி வீரர் சோலைராஜ் தர்மராஜ்

LeeNews · Thoothukudi

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் நீளம் தாண்டுதல் (T44/T62/T64) பிரிவில் இந்திய ராணுவ சுபேதார் சோலைராஜ் தர்மராஜ் 7.15 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இது புதிய ஆசிய சாதனை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், 2022 ஹாங்சோ ஆசிய பாரா போட்டியில் வென்ற தங்கத்தையும் இதன் மூலம் தக்கவைத்துக் கொண்டார்.

18 வயதில் ராணுவத்தில் சேர்ந்த சோலைராஜ், கார்கிலில் பணியில் இருந்தபோது கடும் குளிரால் பாதிக்கப்பட்டு 2018-ல் இடது காலை இழந்தார். செயற்கைக் காலுடன் 2019-ல் நீளம் தாண்டுதல் பயிற்சியைத் தொடங்கி, இன்று ஆசியாவின் சிறந்த வீரராக உயர்ந்துள்ளார்.

தடைகளைத் தாண்டி சாதித்த நம் மண்ணின் மைந்தருக்கு LeeNews சார்பில் வாழ்த்துகள்! 🇮🇳

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு