Skip to content

T20 Final | வரலாற்றில் முதல் முறை.. Low Score எடுத்து அதிலும் வெற்றிபெற்ற பலே அணி!

டி20 தொடர் இறுதிப் போட்டிகளின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரைத் தற்காத்து வெற்றிபெற்ற அணியாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. இளைய

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

டி20 தொடர் இறுதிப் போட்டிகளின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரைத் தற்காத்து வெற்றிபெற்ற அணியாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

இளைய தலைமுறையைக் கவரும் வகையில், கிரிக்கெட் புதிய வடிவம் பெற்று வருகிறது. அதிலும், டி20 போட்டிகள் வந்தபிறகு, ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் குறைவு இல்லாமல் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில், அத்தகைய போட்டிகளில் புதிய சாதனைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இந்த நிலையில், டி20 தொடர் இறுதிப் போட்டிகளின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரைத் தற்காத்து வெற்றிபெற்ற அணியாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. குளோபல் சூப்பர் லீக் 2026 தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய கயானா அணி, 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முன்னதாக, அந்த அணி 9 ஓவர்களுக்குள் 8 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து சரிந்தது. பின்னர் தாக்குப்பிடித்து 85 ரன்களைத் தொட்டது. பின்னர், 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஃபிரான்சிஸ்கோ அணி, அந்த ரன்களைக்கூட எடுக்க முடியாமல் வெறும் 6 ரன்களில் தோல்வியுற்றது. ரன்கள் குறைவாக இருந்தாலும், அதைக்கூட ஃபிரான்சிஸ்கோ அணியை எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தி அமேசான் அணி வெற்றிவாகை சூடினர். இதன்மூலம், குறைந்த ரன்களை எடுத்தாலும், அதையும் கட்டுப்படுத்தி கயானா அமேசான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு