“ரஜினி சாரிடமிருந்து வந்த மெசேஜ்..” – `தர்மன்’ படம் குறித்து அஷ்வத் மாரிமுத்து!
`தர்மன்’ பட அறிமுக விழா நிகழ்வில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசினார். ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் `தர்மன்’ பட

`தர்மன்’ பட அறிமுக விழா நிகழ்வில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் `தர்மன்’ பட அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அஷ்வத் மாரிமுத்து “தலைவர் படம் செய்ய வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் தலைவர் படம், கமல்ஹாசன் சார் தயாரிப்பில் இயக்குவது என்பது வரலாறு. இதில் நானும் என் குழுவும் பாகமாக இருப்பது மகிழ்ச்சி. இதை நான் மட்டும் இயக்கும் படமாக நினைக்கவில்லை. இதே கனவோடு இருக்கும் பலரது பிரதிநிதியாக இருக்கிறேன். இந்தப் படம் இயக்க என்னை அனுமதித்ததற்கு, AGS மற்றும் சிலம்பரசன் சாருக்கு நன்றி. அனிருத்துடன் முதல்முறை இணைகிறேன், படத்தில் எட்டுப் பாடல்கள் இருக்கின்றன. முதலில் தலைவரின் இன்ட்ரோ பாடலை படமாக்குகிறோம். கமல் சாரை சந்திக்கச் சென்றபோது எனக்கு பெரிய பயம் இருந்தது. ஆனால் அவரைச் சந்தித்தபோது ‘நான் ரஜினி ரசிகன், ரஜினி படம் பண்ணுங்க’ என்றார். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.
ரஜினி சாரை சந்தித்தபின் அவரிடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில், ‘நாம் RKFIக்கு படம் செய்கிறோம், சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றார். அவர்கள் இருவருமே புதுமுகங்கள்போல அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள். இது 5 ரூபாய் டாக்டரின் கதை என சில தகவல்கள் உலவுகிறது. இது ஸ்டைலான டாக்டர் இருக்கும், பொழுதுபோக்காக, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்றார்.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா