Skip to content

மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர், பிரியங்கா

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர், பிரியங்கா மோகன் மற்றும் காயடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மஞ்சணத்தி படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் எஸ்.பி.அரவிந்த் இயக்கும் இப்படத்தில் நடிகர் அமீர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இதில் சுவாசிகா மற்றும் அனிஷ்மா அனில் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்