ஒளிப்பதிவாளர் இரா.செழியன் காலமானார்.. தமிழ்த் திரையுலகுக்கு மீண்டும் இழப்பு!
தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் சென்னையில் இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் இரா.செழியன் சிகிச்சை

தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் சென்னையில் இன்று காலை காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் இரா.செழியன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செழியன் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த செழியன், ‘கல்லூரி’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’பரதேசி’, ’ஜோக்கர்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் இயக்கிய டூலெட் (TOLET) திரைப்படம், 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. சிவகங்கையைச் சேர்ந்தவரான செழியன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன். உலக சினிமா என்ற நூலையும் எழுதியுள்ளார்.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா