‘நாளைய தீர்ப்பு’ முதல் ‘ஜனநாயகன்’ வரை.. காதல் நாயகன் டூ மாஸ் ஹீரோ.. விஜயின் சகாப்தம்!
காதல் நாயகனாகத் தொடங்கி மாஸ் ஹீரோவாக உயர்ந்த விஜய், மூன்று தசாப்தங்களாக பாக்ஸ் ஆபீஸை ஆட்சி செய்த திரைப்பயணத்தை ‘ஜனநாயகன்’ மூலம் நிறைவு செய்கிறார்.

காதல் நாயகனாகத் தொடங்கி மாஸ் ஹீரோவாக உயர்ந்த விஜய், மூன்று தசாப்தங்களாக பாக்ஸ் ஆபீஸை ஆட்சி செய்த திரைப்பயணத்தை ‘ஜனநாயகன்’ மூலம் நிறைவு செய்கிறார்.
விஜயின் சினிமா பயணம் 1992ஆம் ஆண்டு, தந்தையின் இயக்கத்தில் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் ஒரு சாதாரண இளைஞனாகத் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தபோது, அவர் எதிர்கொண்ட விமர்சனங்களும் போராட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
Vijay
ஆனால், விமர்சித்தவர்களையெல்லாம் கைதட்டச் செய்து தன் வெற்றியின் உரமாக்கிக் காட்டியவர்தான் நடிகர் விஜய். ஆரம்பத்தில் ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்திய விஜய்க்கு, 1996இல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஃப்ரெண்ட்ஸ்’ என அடுத்தடுத்து வெளியான காதல் திரைப்படங்கள், விஜயை அனைத்துத் தரப்பு குடும்ப ரசிகர்களின் குடும்பப் பிள்ளையாக மாற்றின.
2004இல் தரணி இயக்கத்தில் வெளியான ‘கில்லி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளைத் தகர்த்தெறிந்து, விஜயை ஒரு முழுமையான மாஸ் ஹீரோவாக அரியணையில் ஏற்றியது. ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ என கமர்ஷியல் அத்தியாயம் தொடர… ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘மெர்சல்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ வரை பாக்ஸ் ஆபீஸின் ஒற்றை 06:00 ராஜாவாகத் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
Vijay
காதல் நாயகனாகத் தொடங்கி, ஆக்ஷன் அவதாரமெடுத்து, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவைத் தன் விரல் அசைவில் வைத்திருந்த இந்த உச்ச நட்சத்திரத்தின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ இன்று வெளியானது. ஒரு நடிகராக விஜயின் திரைப் பயணம் நிறைவுக்கு வந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் அவர் படைத்த பிரம்மாண்ட சாதனைகளும், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் அவர் பதித்த இடமும் தமிழ் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும்.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா