Skip to content

Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை… நயன்தாரா விளக்கம்! | Nayanthara | Toxic

இந்தப் படத்துக்காக அவர் என்னை அழைத்த போது, படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தால் அதில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன். Summary பட

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இந்தப் படத்துக்காக அவர் என்னை அழைத்த போது, படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தால் அதில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன்.

Summary

பட புரொமோஷனில் கலந்துகொள்ளாததற்கு தனிப்பட்ட காரணம் இருப்பதாக நயன்தாரா விளக்குகிறார். யஷ் அழைத்ததால் மட்டுமே இந்த சிறப்பு பட நிகழ்வுக்கு வந்ததாக கூறுகிறார். இயக்குநர் கீது, தயாரிப்பாளர் வெங்கட், சக நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் தொலைநோக்கு பார்வை, யஷின் நான்கரை ஆண்டுகள் உழைப்பு ஆகியவை இந்த படத்தை வித்தியாசமாக்கும் என பாராட்டுகிறார்.

“படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால் அதிலிருந்து நான் தள்ளியே இருக்கிறேன். ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு காரணம் யஷ் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வுக்கு வர யஷுடைய ஒரு போன் கால் எனக்கு போதுமானதாக இருந்தது. மேலும் இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ள தயாரிப்பாளர் வெங்கட் சார், சக நடிகைகள் ருக்மிணி, தாரா, ஹூமா, க்யாரா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், இயக்குநர் கீது என அனைவருக்கும் தொலைநோக்கு பார்வை உள்ளது.

Nayanthara

நானும் கீதுவும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அப்போது இருந்த கீது இப்போது நிறைய மாறி இருக்கிறார். இந்தப் படத்துக்காக அவர் என்னை அழைத்த போது, படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தால் அதில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் கீது அதற்கு பல கேள்விகளை கேட்டார், சரி நேரில் வந்து கதை சொல்ல சொன்னேன். இப்படி ஒரு இயக்குநரா என என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டார். இந்தப் படம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். நடிகர்கள் அனைவருக்கும் கீது பக்கபலமாக இருந்தார்.

ராக்கி பாய்… நான் பல உச்ச நட்சத்திரங்களோடு நடித்திருக்கிறேன். முதன்முதலில் யஷை சந்தித்த போது, அவர் சினிமாவில் எப்படி பார்த்தேனோ அப்படித்தான் நிஜத்திலும் இருந்தார். நான் ராக்கி பாயின் ராஜ்ஜியத்துக்குள் நுழைகிறேனா என்பது போல உணர்ந்தேன். மேலும் இப்படி உழைப்பை கொடுக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. தன் வாழ்க்கையில் இருந்து நான்கரை ஆண்டுகளை இந்தப் படத்துக்காக கொடுத்துவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்து இந்தப் படத்துக்காவே தன்னை ஒப்புக்கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்