கிறிஸ்டோபர் நோலனின் `The Odyssey’ to பாரியின் `அன்பே டயானா’.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!
இந்த வாரம் கிறிஸ்டோபர் நோலனின் `The Odyssey’, ஓடிடியில் சமந்தாவின் `Maa Inti Bangaaram’ உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன. 1. Series:

இந்த வாரம் கிறிஸ்டோபர் நோலனின் `The Odyssey’, ஓடிடியில் சமந்தாவின் `Maa Inti Bangaaram’ உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
1. Series: Lucky (English) Apple tv+ – July 15
Lucky
Anya Taylor-Joy நடித்துள்ள சீரிஸ் `Lucky’. கடந்த கால ஆபத்துக்கள் முன்னாள் கிரிமினலை துரத்த ஆரம்பிக்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
2. Post Theatrical Digital Streaming: Ready or Not 2: Here I Come (English) Jio Hotstar – July 16
Ready or Not 2 Here I Come
Matt Bettinelli-Olpin – Tyler Gillett இயக்கத்தில் Samara Weaving நடித்து 2019ல் வெளியான படம் `Ready or Not’. இதன் இரண்டாம் பக்கமாக உருவாகியுள்ளது `Ready or Not 2: Here I Come’. இம்முறை நாயகிக்கு வரும் ஆபத்தில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதே கதை.
3. Maa Inti Bangaaram (Telugu) Jio Hotstar – July 17
Maa Inti Bangaaram
சமந்தா நடித்த படம் `Maa Inti Bangaaram’. குடும்பத்தை காப்பாற்ற ஒரு அதிரடி பெண் எடுக்கும் முயற்சிகளே கதை.
4. Theatre: Varavu (Malayalam) – July 16
Varavu
ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் `Varavu’. ஒரு மனிதனின் மீள் வருகையால் என்ன நடக்கிறது என்பதே கதை.
5. Anbe Diana (Tamil) – July 17
Anbe Diana
பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள படம் `அன்பே டயானா’. ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும், தெலுங்கு பையனுக்கும் இடையே மலரும் காதலில் வரும் சிக்கல்களே படம்.
6. Arulvaan (Tamil) – July 17
Arulvaan
கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் `அருள்வான்’. மலை கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு கல்வி கொடுக்க முயலும் ஒரு கலெக்டர் எடுக்கும் முயற்சியே கதை.
7. Arjunan Per Paththu (Tamil) – July 17
Arjunan Per Paththu
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் `அர்ஜுனன் பேர் பத்து’. கடன் வாங்குவதில் வரும் சிக்கல்களை பற்றி பேசும் படம்.
8. Black Gold (Tamil) – July 17
Black Gold
வெற்றி நடித்துள்ள படம் `Black Gold’. மனித முடி விற்கப்படும் சந்தை பற்றிய கதை.
9. Oh..! Sukumari (Telugu) – July 17
Oh Sukumari
ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் நடித்துள்ள படம் `Oh..! Sukumari’. வளர்ந்து வரும் அரசியல்வாதிக்கும் சுகுமாரி மீது காதல். ஆனால் சுகுமாரி பற்றிய ஒரு ரகசியம் தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.
10. The Odyssey (English) – July 17
The Odyssey
கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள படம் `The Odyssey’. ட்ரோஜன் போருக்கு பின் இதசாவுக்கு திரும்பும் ஒடிஸியின் ஆபத்தான பயணமே கதை.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா