Skip to content

’கேரவனுக்குள் நுழைந்து திடீரென சட்டையை கழற்றிய நபர்..’ காஜல் அகர்வால் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்ட Summary இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால்,

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் செய்த காரியத்தால் தன்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்ட

Summary

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால், சமீபத்தில் தன் கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வெடுத்திருந்த நேரத்தில், அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்த உதவி இயக்குநரின் திடீர் செயல் தன்னுடைய கை கால்களை நடுங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் காஜல் அகர்வால். ராம் சரண் உடனான ’மகதீரா’ திரைப்படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்த காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடிகையாக வலம்வந்தார். தமிழில் விஜய் உடன் துப்பாக்கி, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான் என பல திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது திருமணத்திற்கு பிறகு அதிக திரைப்படங்களில் நடிக்காமல் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.

தற்போது ரன்பீர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணன் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்து பாலய்யாவின் 111வது திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

Kajal Aggarwal The India Story

இந்நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காஜல் அகர்வால், சமீபத்தில் அவருக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘சில நாட்களுக்கு முன்பு, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நான் எனது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ​​அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் ஒருவர், அனுமதி கேட்காமல் திடீரென எனது கேரவனுக்குள் நுழைந்தார். அவர் உடனடியாகத் தனது சட்டையைக் கழற்றினார், அப்போது என் கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பித்துவிட்டன. சட்டையை கழற்றிய அவர், தன் மார்பில் இருந்த என் பெயரின் டாட்டூவை எனக்குக் காட்டினார். அந்தச் சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்” என பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வாலின் நடிப்பில் ‘தி இந்தியா ஸ்டோரி ‘ கடந்த ஜூலை 24 அன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்