Skip to content

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்? எப்போது அறிவிப்பு வரும்? | Jana Nayagan Release Date

ஜூலை 9ஆம் தேதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பு தரப்பு இதனை ஜூலை 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

ஜூலை 9ஆம் தேதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பு தரப்பு இதனை ஜூலை 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதுகுறித்த பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ஜூலை 9ஆம் தேதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

Jana Nayagan

படத்தின் தயாரிப்பு தரப்பு இதனை ஜூலை 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. மேலும் இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் THE HONOURABLE CHIEF MINISTER OF TAMIL NADU C JOSEPH VIJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பலரும் பகிர்ந்தனர். ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே படத்தின் புது ட்ரெய்லருடன் சேர்த்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவின. நேற்று வரை ’ஜனநாயகன்’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. இப்போது படம் ஒருநாள் முன்னதாகவே அதாவது, ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. ’ஜனநாயகன்’ வருகிறது என்பதால் அந்த வாரம் வெளியாக இருந்த பல படங்கள் தள்ளி வைக்கப்படுகிறது. இதில் ’ஜனநாயகன்’ பட ஹீரோ விஜயின் மகன் இயக்கியுள்ள `சிக்மா’ படமும் ஒன்று. இன்றோ நாளையோ ’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்