Skip to content

”இந்திய அணியில் இடம்பிடிக்க 2 ஆண்டுகள் தண்ணீர் பாட்டில்கள் சுமந்தேன்..” அனுபவத்தைக் கூறிய ரஹானே!

12ஆவது வீரராக இருப்பதிலோ, சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதிலோ, அவர்களுக்கு உதவுவதிலோ எந்த தவறும் இல்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

12ஆவது வீரராக இருப்பதிலோ, சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதிலோ, அவர்களுக்கு உதவுவதிலோ எந்த தவறும் இல்லை.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இவர், தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசியுள்ளார். அதில், இந்திய அணியில் இடம்பிடித்தும் இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் பாட்டில் சுமந்தது குறித்து உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த அஜிங்கியா ரஹானே தனது கிரிக்கெட் பயணம் கிரிக்கெட் குறித்து கூறியுள்ளார். அதில், “2011ல் நான் முதன்முதலில் இந்திய அணிக்குள் நுழைந்தபோது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக எனக்கு 2 ஆண்டுகள் ஆனது. அந்த 2 ஆண்டுகளில் சுமார் 20 போட்டிகளில் நான் 12வது வீரராக மட்டுமே பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அது, எனது வாழ்க்கையில் மிகவும் சவாலான காலகட்டம். அப்போது என்னிடம் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவது அல்லது என்னை நானே மேம்படுத்திக் கொள்வது. 12ஆவது வீரராக இருப்பதிலோ, சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதிலோ, அவர்களுக்கு உதவுவதிலோ எந்த தவறும் இல்லை.

Ajinkya Rahane

நான் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டேன். பெஞ்சில் அமர்ந்து ஆட்டத்தைக் கவனித்தது எனது மனநிலையை வளர்க்க உதவியது. இதன் காரணமாகவே என்னால் நீண்டகாலம் விளையாட முடிந்தது. மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும்போதே எனக்குள் பொறுமை வளரத் தொடங்கிவிட்டது. உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன் சேர்க்கும்போது, இந்திய அணியில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் மூத்த வீரர்களுடன் பேசிய பிறகு, நமக்கான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். நீண்டகாலம் விளையாட பொறுமை மிகவும் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு
”இந்திய அணியில் இடம்பிடிக்க 2 ஆண்டுகள் தண்ணீர் பாட்டில்கள் சுமந்தேன்..” அனுபவத்தைக் கூறிய ரஹானே! | LeeNews