இன்று IND vs ENG டி20 போட்டி.. சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா? HotStar-ல் பார்க்கலாமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது Summary அயர்லாந்து டி20 தொடரில்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது
Summary
அயர்லாந்து டி20 தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இன்று முதல் டி20 போட்டியை ரிவர்சைடு மைதானத்தில் இரவு 10 மணிக்கு விளையாடுகிறது. பந்துவீச்சுக்கு சாதகமான பிச்சில் இந்தியா பாசிட்டிவ் தொடக்கம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. தொடக்க வீரர்கள் சோபிக்காத நிலையில், ப்ரைம் ஃபார்மில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
இந்திய டி20 அணி
இங்கிலாந்து ரிவர்சைடு மைதானத்தில் தொடங்கவிருக்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை மோசமாக இழந்திருக்கும் இந்திய அணிக்கு இந்தத்தொடரில் பாசிட்டிவாக தொடங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் பந்துவீச்சுக்கு சாதகமான ரிவர்சைடு மைதானத்தின் ஆடுகளம் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வைபவ் சூர்யவன்ஷி
இதற்கிடையில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகம் ஆவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அயர்லாந்து தொடரில் இந்திய தொடக்க வீரர்கள் சோபிக்காத நிலையில், தன்னுடைய ப்ரைம் ஃபார்மில் இருக்கும் சூர்யவன்ஷி இறக்கப்படுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மற்றொரு பாசிட்டிவான விசயமாக இருக்கிறது.
HotStar-ல் பார்க்கலாமா?
இந்தியா-இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக டெலிகாஸ்ட் உரிமத்தை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டின் நேரடி ஒளிபரப்பும் சோனி LIV மற்றும் ஜியோஹாட்ஸ்டார் செயலிகளிலும் பார்க்கலாம்.

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!
விளையாட்டு
IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!
விளையாட்டு
பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?
விளையாட்டு
“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!
விளையாட்டு
தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?
விளையாட்டு