Skip to content

INDvsENG| ஒரே ஓவரில் 2, 2 விக்கெட்டுகள்.. 80 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 4-0 என இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ind vs eng bcci

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் பெத்தல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் தொடக்கத்தில் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்த குர்னூர் ப்ரார் 13வது ஓவரில் பென் டக்கெட், பெத்தல் இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி இந்தியாவிற்கு விக்கெட்டை எடுத்துவந்தார்.

தொடர்ந்து வந்த இன்ஃபார்ம் வீரர் ஹாரி ப்ரூக்கை பும்ரா அற்புதமான பவுன்சர் மூலம் வெளியேற்ற, அடுத்தடுத்து வந்த பட்லர் மற்றும் சாம் கரன் இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றிய பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்துக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தார். 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பட்லர் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

19 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 88/5 என விளையாடிவருகிறது. குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு