Skip to content

இளமையான கெட்டப்பில் சிவராஜ்குமார்! | Shivarajkumar | Welcome to Wildlife

அடுத்ததாக கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சிவராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. கன்னட சூப்பர் ஸ்டார்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

அடுத்ததாக கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சிவராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சிவராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே ‘Ninu Veedani Needanu Nene’, சமீபத்தில் வெளியான சிங்கிள் ‘Single’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு. இவர் இயக்க உள்ள படத்தில் தான் சிவராஜ்குமார் அடுத்து நடிக்க உள்ளார். Welcome to Wildlife என்ற இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Shivarajkumar

இந்த போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்