FIFA 2026 WC | தங்கக் காலணி விருது.. மெஸ்ஸியுடன் போட்டிபோடும் எம்பாப்வே!
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். எம்பாப்பே 19 கோல்களுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறார். பிபா

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். எம்பாப்பே 19 கோல்களுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறார்.
பிபா உலகக்கோப்பை 2026 தொடரில், கோல்டன் பூட் விருதுக்கான அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7 கோல்களுடன் லியோனல் மெஸ்சி, கிலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதுக்கான போட்டியில், பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே தன்னை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறார். தங்கக் காலணிக்கான போட்டியில் அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி உடன் 7 கோல்கள் அடித்து எம்பாப்பேவும் சமன் செய்துள்ளார்.
கிலியன் எம்பாப்பே, மெஸ்ஸி
பராகுவே அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பில் 70ஆவது நிமிஷத்தில் கிலியன் எம்பாப்பே கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் மெஸ்ஸியுடன் சமன் செய்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். எம்பாப்பே 19 கோல்களுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறார். இதுவரை, உலகக் கோப்பையில் 19 முறை பங்கேற்றுள்ள எம்பாப்பே 19 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற தூத்துக்குடி வீரர் சோலைராஜ் தர்மராஜ்
விளையாட்டு
42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!
விளையாட்டு
IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!
விளையாட்டு
பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?
விளையாட்டு
“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!
விளையாட்டு