Skip to content

FIFA 2026 | நெய்மரைத் தொடர்ந்து ரொனால்டோ.. முடிவுக்கு வந்த உலகக்கோப்பை பயணம்!

போர்ச்சுகல் அணி, ஸ்பெயின் அணியிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், அவ்வணியின் ஜாம்பவான் ரொனால்டோவின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்தது. கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

போர்ச்சுகல் அணி, ஸ்பெயின் அணியிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், அவ்வணியின் ஜாம்பவான் ரொனால்டோவின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்தது.

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், போர்ச்சுகலின் 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் பயணம் ஒரு கொடூரமான முறையில் முடிவுக்கு வந்தது. ஆம், உலகக்கோப்பையின் கால்பந்து தொடரின் ரவுண்ட் 16ஆவது ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி, ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதைத் தொடார்ந்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, போர்ச்சுகலை வழிநடத்திய ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதன்முதலில் விளையாடிய ரொனால்டோ, இந்த உலகக் கோப்பையே தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று போட்டிக்கு முன்னதாகவே அறிவித்திருந்தார்.

இந்தப் போட்டி நிறைவை குறிக்கும் இறுதி விசில் ஒலித்த பிறகு, போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். போர்ச்சுகல் அணி வீரர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் கூறினர். உலகக்கோப்பைத் தொடர்களில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றாலும், போர்ச்சுகல் தேசிய அணியில் இருந்து உடனடியாக விலகுவது குறித்து அவர் உறுதியான எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கிளப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது.

41 வயதான ரொனால்டோ, தொடர்ந்து 6 உலகக்கோப்பைத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) விளையாடி, அனைத்திலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், போர்ச்சுகல் அணிக்காக இதுவரை 232 போட்டிகளில் விளையாடி, உலக சாதனையுடன் 146 சர்வதேச கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு