CWG 2026 | 39 பதக்கங்கள்.. 4ஆவது இடம்.. வாகை சூடிய இந்தியா!
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை இந்தியா வென்று வாகை சூடியுள்ளது. கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த்

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை இந்தியா வென்று வாகை சூடியுள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 39 பதக்கங்களை வென்றது. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியா 39 பதக்கங்களுடன் தர வரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலப் பதக்கங்களுடன் 171 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலிடத்தையும். 29 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களுடன் 110 பதக்கங்களை வென்று இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும், 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் 62 பதக்கங்களை வென்று கனடா 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியா சாதனை
இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை அள்ளிக் கொடுத்த விளையாட்டாகக் குத்துச்சண்டை அமைந்தது. அதில் மட்டுமே இரு பிரிவையும் சேர்த்து இந்தியா 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக, 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது இந்தியா. சாக்ஷி சௌத்ரி இந்தியாவின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்தார், அதேநேரத்தில், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளரான லவ்லினா போர்கோஹைன், பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
Lovlina Borgohain
பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இதன் மூலம், இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஜூடோ ஒரு திருப்புமுனைப் பயணத்தை வழங்கியது. இதில் அஸ்மிதா டே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் சாம்பியன் ஆனார். அவரைத் தொடர்ந்து அதே நாளில் ஹர்ஷ் டோகாஸும் முதலிடத்தைப் பிடித்தார்.
தடகளப் போட்டிகளில், குல்வீர் சிங் ஆண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று, ஒரே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
Sakshi Chaudhary
தேஜஸ்வின் சங்கர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் டெகாத்லான் பதக்க வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதேசமயம், காயம் காரணமாக பர்மிங்காம் 2022 போட்டிகளைத் தவறவிட்ட நீரஜ் சோப்ரா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக, கிளாஸ்கோ 2026-இல் நடைபெற்ற போட்டிகளில், உடல் தகுதி வாய்ந்தவர்களுக்கான எட்டு விளையாட்டுப் பிரிவுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்து ஒருங்கிணைந்த விளையாட்டுப் பிரிவுகளில் 122 இந்திய விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர் .

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!
விளையாட்டு
IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!
விளையாட்டு
பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?
விளையாட்டு
“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!
விளையாட்டு
தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?
விளையாட்டு