Skip to content

“CM-ஐ டார்லிங் என்று அழைத்தேன்!” – முதல்வர் விஜயை சந்தித்தது குறித்து விஷால்!

இப்போது முதல்வராக அவரை பார்ப்பதற்கும் எந்த மாற்றமும் இல்லை. அதே இனிமை, அதே உடல்மொழி, அதே மனிதர். பதவி மட்டும் தான் மாறி இருக்கிறது.

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இப்போது முதல்வராக அவரை பார்ப்பதற்கும் எந்த மாற்றமும் இல்லை. அதே இனிமை, அதே உடல்மொழி, அதே மனிதர். பதவி மட்டும் தான் மாறி இருக்கிறது.

Summary

விஷால் இயக்கி நடித்த ‘மகுடம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், முதல்வர் விஜயை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்தார். கல்லூரி காலத்திலிருந்தே பழக்கம் உள்ள விஜயை இன்று முதல்வராகப் பார்த்தாலும், அவரின் இனிமை, உடல்மொழி மாறவில்லை என கூறினார். முதல்வரை நேரில் ‘டார்லிங்’ என்று அழைத்ததும், பூங்கொத்து மாற்றாக மூன்று குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் வாக்குறுதி அளித்ததும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விஷால் இயக்கி நடித்துள்ள படம் `மகுடம்’. இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியிடப்பட்டது. நேற்று மாலை படத்தின் இரண்டாவது பாடல் `நச்சிந்தி மச்சானே’ பாடல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலைச்சர் விஜயை சந்தித்தது பற்றி பேசினார் விஷால். அது குறித்து அவர் கூறுகையில் “விஜய் அவர்களுடன் எனக்கு பல வருட பழக்கம். அவர் கல்லூரியில் அந்த அண்ணனுடைய பேட்ச். அப்போது பார்த்த அவருக்கும், இப்போது முதல்வராக அவரை பார்ப்பதற்கும் எந்த மாற்றமும் இல்லை.

CM Vijay

அதே இனிமை, அதே உடல்மொழி, அதே மனிதர். பதவி மட்டும் தான் மாறி இருக்கிறது. அவரை பார்த்து டார்லிங் என அழைத்தேன். ஒரு முதல்வரை டார்லிங் என அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என சிந்தித்து பாருங்கள். அவரிடம் உங்களுக்கு பொக்கே கொடுப்பதற்கு பதில், உங்கள் பெயரில் மூன்று குழந்தைகளுக்கு கல்வி அளிக்கிறேன் என சொன்னதும் மிகவும் மகிழ்ந்தார். முதலமைச்சருக்கு பூங்கொத்து தான் தர வேண்டும் என்ற நடைமுறையை நான் மீறி இருக்கிறேன். அதற்கு அனுமதித்தது அவருடைய பெருந்தன்மை. அவரின் ஆட்சி காலத்துக்குள் அந்தக் குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கே வந்துவிடுவார்கள்.

இரண்டு வருடங்கள் முன்பு, விஜய் அவர்களுக்கு கதை சொல்ல அனுமதி கேட்டு சென்றேன். அதை இந்த முறை நினைவுபடுத்தி `உங்களுக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன் நினைவு இருக்கிறதா? அந்த கதையை இப்போது எனக்கு பயன்படுத்திக் கொல்லப் போகிறேன்’ என சொன்னேன், அவர் சிரித்தார்.” என்றார் விஷால்.

தொடர்புடைய செய்திகள்