“சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராகிவிட்டார்.. ஆனால்” முற்றுப்புள்ளி வைத்த COACH!
சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட். Summary இந்திய அணிக்காக அறிமுகம்

சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட்.
Summary
இந்திய அணிக்காக அறிமுகம் ஆகாத வைபவ் சூர்யவன்ஷி குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் எழுப்பிய கேள்விக்கு, பேட்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட் விளக்கம் அளித்துள்ளார். அயர்லாந்துக்கு 2-0 என டி20 தொடரை இழந்த பின்னணியில், சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராக இருந்தாலும், உலகக் கோப்பை வெற்றியில் சஞ்சு சாம்சன் வகித்த பங்கு காரணமாக அதே செயல்முறையை அவர் கடக்க வேண்டும் என கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக எப்போது அறிமுகம் ஆவார்? என்ற கேள்வி தான் ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் மனதிலும் எழுந்துள்ளது. 3 வருடமாக ஒரு டி20 தொடரை கூட இழக்காத இந்திய அணி, அயர்லாந்துக்கு அணிக்கு எதிராக 2-0 என ஒயிட்வாஷ் ஆனபிறகு சூர்யவன்ஷியை ஏன் விளையாடவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
வைபவ் சூர்யவன்ஷி
பல முன்னாள் வீரர்களும் வைபவ் சூர்யவன்ஷியை விளையாடாதது நல்ல முடிவல்ல என்று கூறிவரும் நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அதற்கான பதிலை கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2-0 என அயர்லாந்திடம் டி20 தொடரை இழந்தபிறகு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட் இடம் வைபவ் சூர்யவன்ஷி சலெக்சன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முற்றிலும் தயாராகவே இருக்கிறார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. வைபவ் விளையாடுவதைக் காண நாங்கள் அனைவருமே ஆவலாக உள்ளோம், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்புதான் நமக்கு உலகக் கோப்பையை வென்று தருவதில் சஞ்சு சாம்சன் பெரும் பங்காற்றினார்.
இதனால் சூர்யவன்ஷியும் மற்ற வீரர்கள் மேற்கொண்ட அதே செயல்முறையைக் கடந்து செல்ல வேண்டும். எப்படி இருப்பினும், அவர் எவ்வளவு சிறந்தவர் என்பதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை” என பேசியுள்ளார்.

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!
விளையாட்டு
IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!
விளையாட்டு
பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?
விளையாட்டு
“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!
விளையாட்டு
தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?
விளையாட்டு