`சூர்யா 48′ படப்பிடிப்பு எப்போது துவங்கும்? | Suriya 48 | T J Gnanavel
‘ஜெய்பீம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ’சூர்யா 48’ படத்தில் இணைகிறது சூர்யா – ஞானவேல் கூட்டணி. இப்படத்தின் பூஜை நேற்று காலை நடந்துள்ளது. சூர்யா

‘ஜெய்பீம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ’சூர்யா 48’ படத்தில் இணைகிறது சூர்யா – ஞானவேல் கூட்டணி. இப்படத்தின் பூஜை நேற்று காலை நடந்துள்ளது.
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இதனையடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் `சூர்யா 47′ படத்தின் நடித்து முடித்திருக்கிறார். நேற்று சூர்யாவின் 48ஆவது பட அறிவிப்பு வெளியானது. த.செ. ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். ’கே.ஜி.எஃப்’, ’’காந்தாரா, ’சலார்’ போன்ற படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
Suriya 48
‘ஜெய்பீம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ’சூர்யா 48’ படத்தில் இணைகிறது சூர்யா – ஞானவேல் கூட்டணி. இப்படத்தின் பூஜை நேற்று காலை நடந்தது. `கருப்பு’ படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவிய சாய் அப்யங்கர்தான் இப்படத்துக்கும் இசை. கயாடு லோஹர் படத்தின் நாயகியாக நடிக்கிறார். இவர் தவிர மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற கலைஞர்கள் நடிக்க உள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே.கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா.கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள். ஜூலை மாதம் 22-ஆம் தேதி முதல் `சூர்யா 48′ படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது சூர்யா நடிப்பில் தயாராக உள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும், `சூர்யா 47′ படமும் இந்த ஆண்டே வரும் எனச் சொல்லப்படுகிறது.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா