Skip to content

சர்வதேச அங்கீகாரம் பெற்ற `காளிதாஸ் 2′ | Kalidass 2 | Bharath

உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கி 2018ல் வெளியான படம் `காளிதாஸ்’. இதன் இரண்டாம் பாகத்தையும் இதே கூட்டணி அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உருவாக்கினார்கள். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்துக்கு சர்வதேச அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival – SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது. சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன.

உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற `காளிதாஸ் 2′ | Kalidass 2 | Bharath | LeeNews