Skip to content

சாமானியர்களுக்கான பிக் பாஸ் தயார்! | Bigg Boss Common Man

இதுவரை பிரபலங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த நிகழ்ச்சி, இப்போது அசாதாரண வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட சாதாரண மனிதர்களின் பயணத்தை முன்னிறுத்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இதுவரை பிரபலங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த நிகழ்ச்சி, இப்போது அசாதாரண வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட சாதாரண மனிதர்களின் பயணத்தை முன்னிறுத்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.

இந்திய தொலைக்காட்சி பொறுத்தவரை பிக் பாஸ் மிகப்பெரிய கவனத்தை குவித்தது. தமிழிலும் இதுவரை 9 சீசன்களாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை பிரபலமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்வில் இப்போது சாமானியர்களுக்கு கலந்து கொள்ளும் வண்ணம் தயாராகி வருகிறது ‘Common Man’ பிக் பாஸ் தமிழ் 10.

விஜய் சேதுபதியின் திறந்த அழைப்புடன் தொடங்கிய பிக் பாஸ் Common Man முயற்சிக்கு மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர், பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் கனவை நனவாக்க ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறார்கள். பிக் பாஸ் Common Man மூலம், முதல் முறையாக சாதாரண மக்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பிரபலங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த நிகழ்ச்சி, இப்போது அசாதாரண வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட சாதாரண மனிதர்களின் பயணத்தை முன்னிறுத்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் சேதுபதி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் ஆடிஷன் வீடியோக்களை அனுப்பினர். அதனைத் தொடர்ந்து பல கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்முகப் பரிசோதனைகளின் மூலம் போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர்.

Bigg Boss Common Man

தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் இடம்பிடிக்கும் இறுதி சிலரைக் கண்டறியும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தேர்வுப் பயணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா நடுவர்களாக இணைந்துள்ளனர். மாயா கிருஷ்ணன், இந்த ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக இணைந்து, அத்தியாயத்திற்கு வழிகாட்டுகிறார். பிக் பாஸ் Common Man நிகழ்ச்சியை ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தினமும் ஒளிபரப்பாக உள்ளது மேலும், ஸ்டார் விஜயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

சாமானியர்களுக்கான பிக் பாஸ் தயார்! | Bigg Boss Common Man | LeeNews