BRO CODE இல்ல.. இனி BRO CLUB! – ரவி மோகன் | Ravi Mohan | S J Suryah
கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே

கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே படமே வெளியாகிவிடும்.
ரவி மோகன், எஸ் ஜே சூர்யா, அர்ஜூன் அசோகன் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கி வரும் படம் `ப்ரோ கோட்’. இப்படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் ரவி மோகன். இந்தப் படத்தின் தலைப்பில் பிரபல நிறுவனம் ஒன்று மதுபானம் விற்பனை செய்து வருவதால் படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, அந்தப் பெயரை டைட்டிலாக வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது அந்நிறுவனம்.
இதனை தொடர்ந்து சில நீதிமன்ற விசாரணைகளும் நடந்தன. இப்போது `ப்ரோ கோட்’ என்ற பெயரை பயன்படுத்த முடியாத நிலை வந்ததால், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ரவி மோகன் படத்தின் பெயரை மாற்றியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வரும் அடுத்த படங்களை பற்றி ஒரு பேட்டியில் கூறியவர் அதனை உறுதியும் செய்துள்ளார். அந்தப் பேட்டியில் “ஜீனி போஸ்ட் புரொடக்ஷன் நோக்கிச் சென்றகொண்டிருக்கிறது, அது நல்லபடியாக முடிந்துவிடும்.
கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே படமே வெளியாகிவிடும். `ப்ரோ கோட்’ என்ற படத்தின் பெயரை சில பிரச்னைகளாக `ப்ரோ க்ளப்’ என மாற்றிவிட்டோம். எனக்கு பிரச்னையே பிடிக்காது, எனவே பெயரை மாற்றிவிட்டோம். `ப்ரோ க்ளப்’ இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு வெளிநாட்டு ஷெட்யூல் இருக்கிறது. அது முடிந்ததும் வந்துவிடும். எனக்கு எஸ் ஜே சூர்யா சார் காமினேஷன் புதிது, ஜாலியாக இருக்கிறது.” என்றார்.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா