அப்போ வில்லன்.. இப்போ ஹீரோ.. ஃபஹத் பாசிலின் புதிய படம்! | Fahad Fazil
மேலும், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மேஜிக் செய்யும் கலைஞராக நடிக்கிறார் ஃபஹத் பாசில். இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் ஃபஹத் பாசில்.

மேலும், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மேஜிக் செய்யும் கலைஞராக நடிக்கிறார் ஃபஹத் பாசில்.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் ஃபஹத் பாசில். மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வந்தவர் `புஷ்பா’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். இப்போது தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் மூலம்தான் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மேஜிக் செய்யும் கலைஞராக நடிக்கிறார் ஃபஹத் பாசில். ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது. அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்வதன் மூலம் மற்றொரு பெரிய வித்தையைக் காட்டுவதாக அவர் உறுதி அளிக்கிறார். அப்போதுதான் அவருக்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது. அதன்பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே படத்தின் மையக்கரு. இந்தத் திரைப்படம் 2026 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா