“அன்று சூர்யா சாரைப் பார்க்க முடியாமல் அழுதேன், இன்று..” நெகிழ்ந்த மமிதா | Mamitha
இந்தப் பட ட்ரெய்லரைப்போலதான் படமும் இருக்கும். சூர்யா சாரின் காமெடி, எமோஷன், ஆக்ஷன் என பல பரிமாணங்களை இதில் பார்ப்பீர்கள். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள

இந்தப் பட ட்ரெய்லரைப்போலதான் படமும் இருக்கும். சூர்யா சாரின் காமெடி, எமோஷன், ஆக்ஷன் என பல பரிமாணங்களை இதில் பார்ப்பீர்கள்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷனல் நிகழ்வு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய மமிதா பைஜூ, “இந்தப் பட ட்ரெய்லரைப்போலதான் படமும் இருக்கும். ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் எனச் சொல்லலாம். சூர்யா சாரின் காமெடி, எமோஷன், ஆக்ஷன் எனப் பல பரிமாணங்களை இதில் பார்ப்பீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும்போல ஒரு ரசிகையாக இந்தப் படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன். 2015-இல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சூர்யா சார் கேரளாவில் உள்ள லூலு மாலிற்கு வந்தார்.
VAS
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணன் 11-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். என் அண்ணனும், அவரது நண்பர்களும் லூலு மாலிற்குச் சென்று சூர்யா சாரைப் பார்த்தார்கள். அப்போது கோட்டயத்தில் இருந்து கொச்சி வருவது என்பது மிகப்பெரிய விஷயம். அதனால் அம்மா, அப்பா என்னை விடவில்லை. என் அண்ணன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். நான் அழுதுகொண்டிருந்தேன். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள லூலு மாலில் சூர்யா சாருடன், அவருடைய படத்தில் நடித்து இங்கு வந்து நிற்கிறேன். இது எனக்கு ஒரு மிகப்பெரிய பாக்கியம். ஒரு ரசிகையாக நிறைந்த மனதுடன் இந்தப் படத்தை பார்ப்பேன். இதில் நான் நடித்துள்ள மேடி பாத்திரம் மிகவும் ஜாலியான ஒரு பாத்திரம். நிஜத்தில் நான் அப்படி அல்ல. ஆனால் மேடி அப்படியானவள்” என்று பேசியிருக்கிறார்.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா