Skip to content

500 குழந்தைகளுக்கு சூட்டப்பட்ட ’எர்லிங் ஹாலண்ட்’ பெயர்.. நாடு கடந்து விரும்பப்படும் நார்வே வீரர்!

நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நார்வே அணிக்காக முதல்முறையாக பங்கேற்ற எர்லிங் ஹாலண்ட், தன்னுடைய அபாரமான திறமையால் 7 கோல்களை அடித்து உலக ரசிகர்களை

LeeNews

வெளியிடப்பட்டது: · 2 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நார்வே அணிக்காக முதல்முறையாக பங்கேற்ற எர்லிங் ஹாலண்ட், தன்னுடைய அபாரமான திறமையால் 7 கோல்களை அடித்து உலக ரசிகர்களை கவர்ந்தார்.

Summary

கால்பந்து உலகக்கோப்பையில் அபார ஆட்டத்தால் உலக ரசிகர்களை கவர்ந்த நார்வே நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட், பெரு நாட்டில் அசாதாரண தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 2026 உலகக்கோப்பையில் 7 கோல்கள் அடித்து சாதனை படைத்த அவர் மீது கொண்ட பேரன்பு காரணமாக, இந்த மாதம் பிறந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹாலண்ட் அல்லது எர்லிங் ஹாலண்ட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தேசிய பதிவேடு தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விளையாட்டு என்றால் கால்பந்து தான்.. அதிலும் கால்பந்து உலகக்கோப்பை என்றால் ஒட்டுமொத்த உலக ரசிகர்களுக்கும் அது திருவிழா கோலம் தான்.. ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மார் என்ற ஜாம்பவான்களின் ஆட்டத்தை உலகக்கோப்பையில் பார்ப்பது எல்லாம் அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் வரப்பிரசாதம் போலத்தான் பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் நடப்பு 2026 கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மாரை கடந்து எம்பாப்பே, ஹாரி கேன், லமின் யமால் போன்ற பல வீரர்களின் ஆட்டம் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த வீரர்களை எல்லாம் கடந்து நார்வேவை சேர்ந்த எர்லிங் ஹாலண்ட் தன்னுடைய அபாரமான திறமையால் உலக கால்பந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

erling haaland

நடப்பு உலகக்கோப்பையில் வெறும் 18 தொடுதல்களில் 6 கோல்கள் அடித்ததோடு, முதல் உலகக்கோப்பையிலேயே மொத்தமாக 7 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். மைதானத்தில் அழுத்தம் நிறைய தருணத்திலும் கூலான ஹெட்டை வைத்திருக்கும் ஹாலண்ட், தன்னுடைய அற்புதமான திறமையால் கோல்கள் அடிப்பதை எளிதாகக் காண்பித்தார். மைதானத்தில் ஹீரோவாக ஜொலித்ததோடு மட்டுமில்லாமல், களத்திற்கு வெளியேயும் அவருடைய குறும்புத்தனத்தை பார்த்த கால்பந்து ரசிகர்கள் அவரை அதிகமாக ரசிக்க ஆரம்பித்தனர். 25 வயது இளைஞரான எர்லிங் ஹாலண்டிற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

யு20 உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் 9 கோல்களை அடித்த இந்த இளம் மேதையான எர்லிங் ஹாலண்டிற்கு, 2026 உலகக்கோப்பைக்கு பிறகு உலகளவில் ரசிகர்கள் உருவெடுத்துள்ளனர்.

அந்தவகையில் பெரு நாட்டில் உள்ள கால்பந்து ரசிகர்கள் எர்லிங் ஹாலண்ட் மீது கொண்ட பேரன்பின் காரணத்தால், இந்த மாதத்தில் பிறந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்ட் பெயரை சூட்டியுள்ளனர்.

erling haaland OneFootball

பெருவின் தேசிய அடையாளப் பதிவேட்டின்படி, அந்நாட்டில் உள்ள ஹாலண்டின் ரசிகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவரது பெயரைச் சூட்டும் அளவிற்குச் சென்றுள்ளனர். அப்டேட்டின் படி 468 குழந்தைகளுக்கு ஹாலண்ட் என்ற பெயரும், 91 குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்ட் என்ற முழு பெயரும் சூட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

எர்லிங் ஹாலண்ட்

பெருவில் குழந்தைகளுக்குப் பெயரிடும் பழக்கவழக்கங்களில் கால்பந்து நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தி வருகிறது. அறிக்கைகளின் படி, ஏற்கனவே 3,402 பெருவியர்களுக்கு மெஸ்ஸி என்று பெயரிடப்பட்டுள்ளது, அவர்களில் 292 பேர் லியோனல் மெஸ்ஸியின் முழுப் பெயரைக் கொண்டுள்ளனர். அதேபோல அந்நாட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரைக் கொண்ட 1,185 பேர் உள்ளனர், அதே சமயம் ஸ்பெயினின் இளம் வயது நட்சத்திரமான லமின் யமாலின் பெயரும் 1,241 பேருக்கு வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மாரின் பெயர் 33,809 பெருவியர்களுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

விளையாட்டு

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

விளையாட்டு

“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!

விளையாட்டு

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

விளையாட்டு

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

விளையாட்டு
500 குழந்தைகளுக்கு சூட்டப்பட்ட ’எர்லிங் ஹாலண்ட்’ பெயர்.. நாடு கடந்து விரும்பப்படும் நார்வே வீரர்! | LeeNews