38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் லிஸ்ஸியை இயக்கிய ப்ரியதர்ஷன்! | Priyadharshan | Lissy
2016ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் இந்த தம்பதி இணைந்து வாழ துவங்கினர். முன்னணி இந்திய இயக்குநர்களில்

2016ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் இந்த தம்பதி இணைந்து வாழ துவங்கினர்.
முன்னணி இந்திய இயக்குநர்களில் ஒருவர் ப்ரியதர்ஷன். இவர் பிரபல நடிகை லிஸ்ஸியை 1990இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர், சமீபத்தில் இந்த தம்பதி இணைந்து வாழத் துவங்கினர்.
Lissy
இதுகுறித்து ப்ரியதர்ஷன் கூறியபோது, “நாங்கள் இணைந்து 32 வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதில் ஒரு சலிப்பும், ஈகோவும் வந்தது. என்னால் நீயா, உன்னால் நானா? என்ற ரீதியிலான ஈகோ. அது ஒரு கசப்பான உறவாக மாறியது. அதனால் நாங்கள் இருவரும் பிரிய முடிவெடுத்தோம். ஆனால் சில வருடங்கள் கடந்த பிறகு, ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதை உணர்ந்தோம். எனவே மறுபடி இணைந்துவிட்டோம், அவ்வளவுதான்” என்றார்.
தற்போது லிஸ்ஸியை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது பேசுபொருளாகியுள்ளது.1988-இல் வெளியான `சித்ரம்’ படத்திற்குப் பிறகு, சுமார் 38 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் மீண்டும் லிஸ்ஸியை இயக்கி இருக்கிறார். ஆனால் இது திரைப்படம் அல்ல, ஒரு நகைக் கடை விளம்பரத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளது இந்த ஜோடி. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபு கணேசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ராஷ்மிகா – கௌதம் – அனிருத் கூட்டணி.. நாளை தொடங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்!
சினிமா
மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!
சினிமா
கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!
சினிமா
இணையத்தை மிரட்டும் ராஜாவின் ‘Trance’.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!
சினிமா
ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சினிமா