
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அப்டே்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படு வருகின்றன. மேலும் உங்களுடன் ஸ்டாலின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகளையும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கி வருகின்றன. இதன் மூலம், மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் முதல் கட்ட பயனாளிகளின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அப்டே்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த மகளிருக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற திருணம நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய அரசு மகளிருக்கான அரசாக விளங்குகிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் 800 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1 கோடி 20 இலட்சம் பேருக்கு ரூ 1000 வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். ஒரிரு மாதங்களில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அதில் முதல் தொகுதியாக வேடசந்தூர் தொகுதியில் திமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரை பார்த்தாலும் அமித்ஷா முகம் தான் தெரிகிறது என்றும் விமர்சித்தார்.