
பெரும்பாலும் நாம் அனைவருமே இதை ஏதோ நிறுவனத்தின் பெயர் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மை அது இல்லை.

நம் அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம் கண்களுக்கு முன்னால் வருகின்றன. ஆனால், மக்கள் இதைப் பற்றி பெரிதாக தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால், அவை பற்றி தெரிந்து கொள்ளும்போது மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.

அதே போல தான் லாரியின் பின்னால் Sound horn என்று எழுதியிருப்பதை பலரும் பார்த்திருப்பீர்கள். அதே போல் NP என்று எழுதியிருப்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

பெரும்பாலும் நாம் அனைவருமே இதை ஏதோ நிறுவனத்தின் பெயர் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இது வாகனம் எங்கெல்லாம் செல்லலாம் என்று அனுமதிக்கும் வார்த்தையாகும்.

லாரி போன்ற வாகனங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் பெர்மிட் வாங்க வேண்டும். அதற்காக பணம் செலுத்தவேண்டும். லாரி போன்ற வாகனங்கள் பொதுவாக மாநிலத்திற்குள் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.

பொதுவாக லாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் லாரிகள் பெர்மிட் வாங்குவது என்பது கடினமான விஷயம் ஆகும். அதன் காரணமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மொத்தமாக பெர்மிட்களை எடுத்துக்கொள்ள வழங்கப்படும் வாய்ப்பு தான் AIP மற்றும் NP ஆகும்.
இது பஸ், கார், டிரக் போன்ற வாகனங்களுக்குப் பெறும் உரிமம் ஆகும். ஒரு முறை இந்த பெர்மிட்டை வாங்கிவிட்டால் அது 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். இந்த AIP என்பதை பெற்றுவிட்டால் நாட்டில் எங்கு வேண்டுமானாலும், எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அதுபோல ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பெர்மிட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது All India Permit –ன் ஒரு துணை பிரிவாகும். National Permit என்பது பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைச் சுற்றியுள்ள 4 மாநிலங்களுக்கு மட்டுமே சென்று வர அனுமதி வழங்கப்படும். அதன் காரணமாக பக்கத்து மாநிலத்திற்கு மட்டும் சென்று வரும் வாகனங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது பஸ்களுக்கு வழங்கப்படமாட்டாது.