உடற்பயிற்சி செய்ய நேரமில்லாத இன்றைய அவசர உலகத்தில் 4 நிமிட வொர்க்அவுட் எனப்படும் தபாடா (Tabata) முறை ட்ரெண்டாகி வருகிறது.
Summary
ஜப்பானிய விஞ்ஞானி இசுமி தபாடா உருவாக்கிய 4 நிமிட தபாடா உடற்பயிற்சி முறை, 20 வினாடி தீவிர பயிற்சி மற்றும் 10 வினாடி ஓய்வு என 8 செட்களாக செய்யப்படுகிறது. ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ், பர்பீஸ், ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற பயிற்சிகள் இதயத் துடிப்பை உயர்த்தி வளர்சிதை மாற்றத்தை தூண்டி கலோரிகளை எரிக்கின்றன. குறைந்த நேரம் உள்ள இளைஞர்கள், கார்ப்பரேட் ஊழியர்களுக்கு ஸ்டாமினா, இதய நலம், உடல் கட்டமைப்பு மேம்பாட்டை வழங்குகிறது.
ஜப்பானிய விஞ்ஞானி இசுமி தபாடாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நவீன உடற்பயிற்சி பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 20 வினாடிகள் மிகத் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் 10 வினாடிகள் ஓய்வு என்ற சுழற்சியில் மொத்தம் 8 செட்களாக 4 நிமிடங்களில் இந்த பயிற்சி செய்து முடிக்கப்படுகிறது.
ஸ்குவாட்ஸ் (Squats), புஷ்-அப்ஸ் (Push- ups), பர்பீஸ் (Burpees) மற்றும் ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) போன்ற பயிற்சிகளை இடைவிடாது செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரித்து உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) தூண்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உடலில் கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

இதன்மூலம் உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாத கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது ஸ்டாமினாவை வழங்கி, இதய நலத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன் தேவையில்லாத கொழுப்பை குறைத்து உடல் கட்டமைப்பை சீராக வைக்கவும் உதவுகிறது.
வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சியை உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு அல்லது மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள், முறையான வார்ம்-அப் மற்றும் மருத்துவ ஆலோசனையின்றி செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
