விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 நிதி கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்தார்.
2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்த நிலையில், இன்று அமைச்சர் ஆர்.வினோத் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் குறித்து வாசித்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்…
- விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 நிதி கோடி ஒதுக்கீடு
- பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள்
- 5 ஆண்டுகளுக்கு ரூ.600 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம்
- உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4000 சிறப்பு ஊக்கத்தொகை
- உயிர்ம உரப் பயன்பாட்டுக்காக நிரந்த மண்புழு உற்பத்திக்கூடங்கள் அமைக்கப்படும்.
- நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய புதிய இயற்கை வேளாண்மைத் தோப்பு உருவாக்கப்படும். நஞ்சில்லா உணவு உற்பத்தி, இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி
- 20 ஏக்கர் பரப்பளவில் உயிர்ம வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
- ரூ.34 கோடியில் நெல் விதை உற்பத்தி, விநியோக மானியத்துக்குச் சிறப்புத் திட்டம்
- ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவ செயலி
- ரூ.203 கோடியில் பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம்
- தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.63.81 கோடி நிதி ஒதுக்கீடு
- மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
