கவின், 2023 ஆகஸ்டில் தனது நீண்ட கால காதலியான மோனிகா டேவிட்டைத் திருமணம் செய்துகொண்டார்.
Summary
சினிமாவில் ‘பிட்சா’, ‘இன்று நேற்று நாளை’, ‘சத்ரியன்’ போன்ற படங்களில் நடித்த கவின், ‘டாடா’ மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 2023ல் மோனிகா டேவிட்டை திருமணம் செய்த அவர், தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சமூக வலைதளத்தில் ஆண், பெண் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்த அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
‘கனா காணும் காலங்கள்’ உட்பட சில தொடர்களின் மூலம் பிரபலமான கவின், சினிமாவில் ‘ பிட்சா’, ‘ இன்று நேற்று நாளை ‘, ‘சத்ரியன்’ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் ‘நட்புனா என்னனு தெரியாதா’ மூலம் கதாநாயகன் ஆனார். `டாடா’ படம் மூலம் குறிப்பிடத்தகுந்த நட்சத்திரமாக மாறினார்.

Kavin
கவின், 2023 ஆகஸ்டில் தனது நீண்ட கால காதலியான மோனிகா டேவிட்டைத் திருமணம் செய்துகொண்டார். மோனிகா ஒரு பள்ளி ஆசிரியை. தற்போது இந்த தம்பதிக்கு இன்று குழந்தைகள் பிறந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கவின் “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் ஆசீர்வதித்த இறைவனுக்கு, மனமார்ந்த நன்றியுடன் நன்றி கூறுகிறோம். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது” என்று பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த தம்பத்திற்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா சார்ந்து கவின், நயன்தாரா உடன் இணைந்து நடித்து, விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘ ஹை’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்ததாக தந்தட்டி இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் `பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார்.
