கண்டனங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் கப்பல்களுக்கு 20% வரி திட்டத்தை திரும்பப் பெற்ற ட்ரம்ப், வளைகுடா நாடுகளுடன் பெரிய வர்த்தக, முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்வதாக அறிவித்துள்ளார்.
Summary
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு 20% வரி விதிப்பதாக ட்ரூத் சோஷியலில் அறிவித்த ட்ரம்ப், உலகளாவிய கண்டனங்களின் பின்னர் அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார். இதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் பெரிய வர்த்தக, முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்யப்படும் என கூறியுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீர்வழியைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்கும் என்றும் அதன் வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் இந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும் ஜூலை 13 அன்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தது.

ஹார்முஸ் ஜலசந்தி – அதிபர் ட்ரம்ப்
இதனையடுத்து ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு விதிக்கவிருந்த 20 சதவீத வரித் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். அதற்குப் பதிலாக, வளைகுடா நாடுகளுடன் பெருமளவிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
