தென்னிந்திய வணிகத் திரைப்படங்களில் பெண்களை சித்தரிக்கும் விதம் மற்றும் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை இன்னும் சில இடங்களில் மாறாமல் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்றும் தமன்னா அந்தப் பேட்டியில் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
திரைப்படங்களில் இடம்பெறும் சிறப்பு நடனப் பாடல்களை ‘ஐட்டம் சாங்’ (Item Song) என்று அழைப்பது பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல என்று நடிகை தமன்னா தனது சமீபத்திய பேட்டியில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தென்னிந்திய திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். ‘ஐட்டம் சாங்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை என்றும், அந்தச் சொல் பெண்களைக் கேவலப்படுத்தும் விதமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தனிப் பாடலில் ஆடும் நடனத்திற்காக நடிகைகள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

Tamannaah@Tamannaah
ஆனால், அதை ‘ஐட்டம்’ என்று சுருக்குவது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை இல்லை என்றும் நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்காமல், அவர்களின் நடிப்புத் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சினிமாத்துறையில் இருக்கும் இந்த அணுகுமுறை மாற வேண்டும் என்றார். மேலும், இந்த வகையான பாடல்களை ‘ஐட்டம் சாங்ஸ்’ என்று அழைப்பதற்குப் பதிலாக ‘பார்ட்டி சாங்ஸ்’ என்று அழைக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார். கத்ரீனா கைஃப், கரீனா கபூர் போன்ற முன்னணி நடிகைகளின் சிறப்புப் பாடல்களை உதாரணமாகக் காட்டிய அவர், சில நேரங்களில் படங்கள் தோல்வியடைந்தாலும் இத்தகைய பாடல்கள் கலாச்சார ரீதியாக மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன என்று கூறியுள்ளார். தென்னிந்திய வணிகத் திரைப்படங்களில் பெண்களை சித்தரிக்கும் விதம் மற்றும் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை இன்னும் சில இடங்களில் மாறாமல் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்றும் தமன்னா அந்தப் பேட்டியில் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
