முறையான யோகா பயிற்சி மூலம் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைந்து, இதய நோய் அபாயம் தணியும் என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன
யோகா பயிற்சி இதய நோயின் அபாயத்தை குறைப்பதாக, பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த இறப்புகளில் 62 சதவீதம், இதய நோய்களால் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய்கள் நடுத்தர வயதிலேயே தொடங்குவதாகவும் தெரியவருகிறது. ரத்தத்தில் அதிக கொழுப்பு சேர்வது, உடல் பருமன், நாள்பட்ட மன அழுத்தம், முறையற்ற தூக்கம், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது ஆகியவை, இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

yoga
இப்படியான சூழலில், முறையான யோகா பயிற்சி மேற்கொள்வது, சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நவீன வாழ்க்கை முறை உடலின் மீது திணிக்கும் அழுத்ததுக்கு எதிராக, பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தை யோகா தூண்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், உடற்பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்துவதில்லை. ஆனால், யோகா பயிற்சி மன அழுத்தத்தை ஏற்படும் ஹார்மோன்களை குறைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இதய நோய்கள் வராமல் தடுக்க யோகா ஒரு சிறந்த வழிமுறை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில், அனைத்து வகையான யோகா முறைகளும் அனைவருக்கும் பொருந்தாது என்ற சூழலில், இதயநோய் உள்ளவர்கள் யோகா செய்ய தொடங்கும் முன், மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது.
