ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சுக்கு சிபிஎம் பேபி விமர்சனம் செய்துள்ளார்.
Summary
டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் கேரள அரசியல் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகள் மீது சிபிஎம் பொதுச்செயலர் எம்.ஏ.பேபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பினராயி விஜயனை கட்டிப்பிடிக்க முடியாது என்ற ராகுலின் பேச்சு, அமலாக்கத் துறை மற்றும் மோடி அரசுக்கு பாதை அமைக்கும் வகையில் இருப்பதாகவும், இதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் அவர் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தினார்.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இண்டியா கூட்டணிக்கட்சிகளின் கூட்டத்தில் கேரள அரசியல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கட்சியினர் பினராயி விஜயனை தான் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அவருடன் தனக்கு அரசியல் மோதல் நீடிப்பதால் அதைச்செய்ய முடியாது என்றும் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பேபி, பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் கைதை வலியுறுத்தி, அமலாக்கத் துறைக்கும் மோடி அரசுக்கும் பாதை அமைத்துக்கொடுப்பவராக செயல்படுவதை ராகுல்காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதைத்தான் அவரிடம் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
