இப்படத்தில் பணியாற்றிய தொழிநுட்பக் கலைஞர்களுக்கு வெற்றியைக் கொண்டாடும் விதமாக சொகுசு காரை பரிசளித்தார் சூர்யா.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு’. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ஆம் தேதி வெளியான படத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைத்து அசத்தி வருகிறது. வசூலிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் படம் ரூ.340 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியிலும் படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பணியாற்றிய தொழிநுட்பக் கலைஞர்களுக்கு வெற்றியைக் கொண்டாடும் விதமாக சொகுசு காரைப் பரிசளித்தார் சூர்யா. இப்போது சூர்யாவைச் சந்தித்த ஆர்ஜே பாலாஜி தனது நன்றியை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “இதுதான் நாங்கள்… முதல் நாளில் இருந்தே நீங்கள் என்னை நம்பினீர்கள். அந்த நம்பிக்கைதான் கனவை நனவாக்கியுள்ளது. உங்களின் ஆதரவு என் வாழ்க்கைக்குப் புதிய துவக்கத்தைக் கொடுத்துள்ளது. நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கினபடி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இது எதுவுமே நீங்கள் ஒருவர் இல்லாமல் நடந்திருக்காது சூர்யா சார். என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டீர்கள். நம்பிக்கைக்கு, மரியாதைக்கு மற்றும் குறிப்பாக இந்த அழகான எப்போதும் கொண்டாடக்கூடிய உறவுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
