கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முதன்மையான கோரிக்கை என அக்கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஜூன் 6ஆம் தேதி டெல்லிஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்துவதாக கரப்பான் ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கத்தைத் தொடங்கினார். அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசுக்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப் பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்தப் பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஜூன் 6ஆம் தேதி டெல்லிஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்துவதாக கரப்பான் ஜனதா கட்சி அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜினாமா செய்வதற்குப் பதில் சிபிஎஸ்சி அதிகாரிகள் 2 பேரை தற்காலிக இடைநீக்கம் செய்திருப்பது வெறும்கண்துடைப்பு என்றும் விமர்சித்துள்ளது.

தர்மேந்திர பிரதான்
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முதன்மையான கோரிக்கை என அக்கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதுள்ள அரசியல் முறையில் குறைகள் உள்ளதால், இளம்தலைமுறையினர் தங்களைப் போன்ற இயக்கத்துக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ள கரப்பான் ஜனதா கட்சி, ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி மீதும் இளம்தலைமுறையினர் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆன்லைன் மனுவில் இதுவரை 8 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

CJP spokespersons
தங்கள் கட்சியில் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இணையவுள்ளதாக கூறினர். டெல்லியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது அமைப்பை விரிவுபடுத்த புலனாய்வு பத்திரிகையாளர் சௌரவ் தாஸ், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
