லோகேஷும் என்னை விஜய் சாரிடம் கூட்டி சென்றார். அவர் மிகவும் இனிமையாக, பணிவாக நடந்து கொண்டார். நான் நடித்த படங்களை பற்றி பேசி, மாநகரம் படத்தில் நான் பேசிய வசனத்தை குறிப்பிட்டு என நிறைய பேசினார்.
Summary
சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படம் அறிவிப்பிலிருந்தே எதிர்பார்ப்பை கிளப்பியது. லியோ துவக்க விழாவில் விஜயை முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை சந்தீப் பகிர்ந்து, மாநகரம் பட வசனங்கள் வரை நினைவில் வைத்திருந்த விஜயின் பணிவு, ஜேசன் சஞ்சயின் ரசிகத்தனம் ஆகியவை தான் இந்த கூட்டணிக்கு ஊக்கமாக இருந்ததாக கூறுகிறார்.
சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்மா’. தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவானது. இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் அளித்த பேட்டியில் ‘சிக்மா’ படம் குறித்து கேட்கப்பட, அதற்கு பதிலளித்த அவர் “நான் விஜய் அவர்களை முதன் முதலில் சந்திக்க `லியோ’ பட துவக்க விழாவின் போது சென்றேன். லோகேஷ் என்னை அழைத்து சென்றார். படம் சம்பந்தப்பட்டவர்கள் நிறைய பேர் இருப்பார்களே என நான் அங்கு தாமதமாக தான் சென்றேன்.

Jason Sanjay Sigma
லோகேஷும் என்னை விஜய் சாரிடம் கூட்டி சென்றார். அவர் மிகவும் இனிமையாக, பணிவாக நடந்து கொண்டார். நான் நடித்த படங்களை பற்றி பேசி, மாநகரம் படத்தில் நான் பேசிய வசனத்தை குறிப்பிட்டு நிறைய பேசினார். என் மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும் எனக் கூறினார். சஞ்சய் என்னை முதலில் சந்திக்க வந்த போது அதே விஷயத்தை சொன்னார். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், இந்தப் படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன் என அனைத்தையும் சொன்னார். இப்படியான நபர்கள் என்னுடைய படங்களை கவனிக்க வேண்டும் என நினைத்தோம், அது நடந்துவிட்டது என்பது எனக்கு பெருமையாக இருந்தது.

Sigma
