பிரபல நடிகர் ராம் சரண் ஒரு நாளுக்கு 4 லட்சம் சம்பளம் வாங்கும் நபரை தனது தனிப்பட்ட பாதுகாப்பாளராக நியமித்துள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகராக உள்ள ராம் சரணுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் புச்சிபாபு சனா இயக்கத்தில் பெத்தி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ளது.
இதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ராம் சரன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றபோது அங்கு ராம் சரண் சென்றிருந்தார்.

அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த நிலையில், ராம் சரணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராம் சரண் தனது தனிப்பட்ட பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் இந்தியாவிலேயே அதிகம் சம்பவம் வாங்கும் ஒருவரை தனது பாதுகாப்பாளராக நியமித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் காம்பியா என்ற நாட்டை சேர்ந்த MMA Fighter கெவின் குண்டா என்பவரை ராம் சரண் தனது பாதுகாப்பாளராக நியமித்துள்ள நிலையில், அவருக்கு சம்பளமாக ஒரு நாளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கெவின் குண்டா இத்தாலியின் புகழ்பெற்ற கொலோசியம் சாம்பியன் பெல்ட் MMA (Colosseum Champion Belt MMA Italy) பட்டத்தை வென்று உலகப்புகழ் பெற்றார். ராம் சரணுக்கு முன்பாக இவர் ஐரோப்பாவில் பல விஐபி-க்கள் (VIPs), தொழிலதிபர்கள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் விஐபி பாதுகாப்பு வழங்கும் பணிகளைச் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
