தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
Summary
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். 118 இடங்கள் என்ற பெரும்பான்மை எட்டாத நிலையில், 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு அறிவித்ததால், பெரும்பான்மைக்கு மேலும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்துள்ளனர். எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில், 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் தவெகவை ஆதரவளிக்கப்போவதாக இன்று காலை அறிவித்திருக்கிறது. இதன்மூலம், பெரும்பான்மைக்கு 6 இடங்களே தேவைப்படுகிறது.

விஜய் – விஸ்வநாத் அர்லேகர்
இதற்கிடையில் தான், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அல்லேகரை இன்று மாலை 3.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். இதற்காக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்த அவருடன், தவெக முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் உள்ளிட்டோர் இருந்தனர். இதன்மூலம், நாளை தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையடுத்து, சட்டப்பேரவையில் தவெக பெரும்பான்மையை அறிவிக்க குறிப்பிட்ட காலம் அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகு, அவர் பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் தவெக ஆட்சி தொடரும் இந்தசூழலில் தான், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை பெறும் நோக்கில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
