
ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Summary
ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரோபோ சங்கர் மறைவை ஒட்டி அவரது திரைப்பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். ரோபோ சங்கரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமெடி செய்து, பார்ப்பவர்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் இன்று நம்மோடு இல்லை.. 2 நாட்களுக்கு முன்பு வரை கேமரா.. ஆக்ஷன் என்ற சொல்லுக்கு நடித்துக் காட்டியவர், இப்போது மண்ணுலகை விட்டு மறைந்திருக்கிறார். ரோபோ சங்கர் மறைவை ஒட்டி அவரது திரைப்பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். சமீப ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் காமெடி ஷோக்களில் ரோபோ சங்கரை ஒரு நடுவராக பார்த்திருப்போம்.

ரோபோ சங்கர்
ஆனால், தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகள் உருவான காலகட்டத்திலேயே கலக்கலான performance ஆல் பிரபலமானவர்தான் ரோபோ சங்கர். மதுரையை பூர்வீகமாக கொண்ட ரோபோ சங்கர் தனது உடல் மொழியை ஆயுதமாக்கி, சேட்டைகள் மூலமாக சிரிக்க வைத்தவர். ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி என மேடைக் கலைஞராகவே தன் வாழ்வைத் தொடங்கினார். மேடை நிகழ்ச்சிகளுக்கு இடையே, ரோபோவைப்போல் உடல் அசைவுகளைச் செய்து மக்களைக் கவர்ந்தவர்தான் இந்த சங்கர்.
இப்படியாக மேடைகளில் அவர் போட்ட ’ரோபோ’ வேடம், பின்னாளில் அடையாளமாக மாறி, ’ரோபோ சங்கர்’ என்ற அடைமொழியாகவே மாறிப்போனது. 1990களின் இறுதியில் சினிமாவுக்குள் நுழைந்தவருக்கு, தொடக்கத்தில் சிறு கதாபாத்திரங்கள்கூட கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2007ஆம் ஆண்டில் வெளியான ’தீபாவளி’ படத்தில், கூட்டத்தில் ஒருவனாக வந்த ரோபோ சங்கர், 2013ஆம் ஆண்டு வெளியான ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சவுண்ட் சுதாகர் கதாபாத்திரத்தில் கவனிக்கப்பட்டார்.