அட்லீ – ப்ரியா 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2023ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு மீர் எனப் பெயரிட்டனர்.
Summary
தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களால் முன்னணி இயக்குநராக உயர்ந்த அட்லீ, பாலிவுட்டில் ‘ஜவான்’ மூலம் சாதனை படைத்தவர். 2014ல் ப்ரியாவை திருமணம் செய்த இவர்களுக்கு, 2023ல் பிறந்த மீருக்கு அடுத்ததாக இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்கை பிறந்த மகிழ்ச்சியை ‘இப்போது நான் அண்ணன்’ என மீர் சமூக வலைதளங்களில் அறிவித்ததை தொடர்ந்து, ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் முதன்மையான இயக்குநராக மாறி இருப்பவர் அட்லீ. ராஜா ராணி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து `தெறி’, `மெர்சல்’, `பிகில்’ படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறினார். பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிப்பில் `ஜவான்’ படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இப்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் `ராக்கா’ படம் இயக்கி வருகிறார்.

Atlee Priya Baby
அட்லீ – ப்ரியா 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2023ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு மீர் எனப் பெயரிட்டனர். இதனை தொடர்ந்து இன்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு ‘அண்ணன்’ ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து அன்பும் வாழ்த்துக்களும் குவிய தொடங்கி உள்ளன. சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
