அவர் மிகவும் சரியானவர், தன்மையானவர், நேர்மையானவர் அதுதான் அவரது பவர். நாங்கள் பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக தான் இருப்போம்.
Summary
நயன்தாராவுடன் தன் உறவு குறித்து விக்னேஷ் சிவன் பேசுகயில், வீட்டில் சண்டை நேரங்களில் கூட பாடல் வரிகளை பயன்படுத்தி சூழலை லைட்டாக்குவதாகவும், கோபம் வந்தால் நயன்தாரா டெரர் என்றாலும், அவர் மிகவும் இயல்பான, நேர்மையான மனைவியாக இருப்பதாகவும் கூறினார்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK’. இப்படம் சம்பந்தமாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் நயன்தாரா உடனான வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அது குறித்து அவர் கூறியபோது “என்ன வாங்கினாலும் அதை சாமி முன்னால் வைத்து எடுப்பதை போல, நான் என்ன லிரிக்ஸ் எழுதினாலும், அதை நயனுக்கு மெசேஜாக அனுப்புவேன். அவர் ஒரு ஹார்ட் சிம்பள் போட்டு அனுப்புவார். அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளருக்கு நான் அனுப்புவேன்.

Nayanthara
சில நேரம் வீட்டில் சண்டை நடக்கும், அப்படியான சூழலில் வரிகளை எழுதிக் கொடுக்க வேண்டிய தருணமாக இருக்கும். அப்படியான சமயங்களில் சண்டையை லைட்டாக்க இதனை பயன்படுத்திக் கொள்வேன். அவங்க சாதாரண ஆள் கிடையாது, கோபம் வந்தால் ரியல் டெரர் தான். அவர் மட்டுமல்ல எல்லோருடைய மனைவிகளும் டெரர் தான். ஆனால் அவர் மிகவும் சரியானவர், தன்மையானவர், நேர்மையானவர் அதுதான் அவரது பவர். நாங்கள் பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக தான் இருப்போம். படப்பிடிப்பு இருக்கும் சமயங்களில் மட்டும் தான் பிரிந்திருப்போம். அது முடிந்ததும் பிறகு ஒன்றாகி விடுவோம்.
365 நாட்களில் 100 நாட்களாகவது நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை பின்பற்றுகிறோம். 265 நாட்கள் தான் வேலை. இடையில் இடையில் பிரேக். அந்த பிரேக்கை பெரியதாக எடுத்துக் கொள்வோம். அது போக தினமும் இரவு எங்காவது காரில் சென்று சாலையோர உணவுகளை வாங்கி வர சொல்லி சாப்பிடுவோம். ஒருவேளை இந்தக் கடையில் எல்லாம் சாப்பிட மாட்டேன் என சொல்பவராக இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் மிக இயல்பானவர் என்று கூறியுள்ளார்.
