நான் ஒரு செய்தித்தாளில் படித்த ஒரு விஷயத்தை வைத்து, இதனை `சூது கவ்வும்’ போன்ற ஒரு படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பின்னர் இன்னொரு செய்தி ஒன்றை படித்த போது, இந்த இரண்டையும் இணைத்து கதையாக்கினால் என்ன என்று ஒரு ஒன்லைனை யோசித்தேன்.
Summary
விக்னேஷ் ராஜா இயக்கிய ‘கர’ படத்தின் கதை, செய்தித்தாளில் படித்த இரண்டு சம்பவங்களை இணைத்து உருவானது என அவர் பேட்டியில் கூறுகிறார். போர்தொழில் படத்துக்குப் பிறகு தனுஷ் கதையை கேட்டு, தனது கதாபாத்திரம் மிக நெகடிவாக இருக்கக் கூடாது, பார்வையாளர்கள் கனெக்ட் ஆக வேண்டும் என்று மாற்றம் பரிந்துரைத்தார். அந்த ஆலோசனை கதையை மேலும் வலுப்படுத்தியதாக விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.
தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர’. ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் தெடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அப்பேட்டியில் கர படத்தின் கதை உருவான விதம் மற்றும் தனுஷ் அதில் சொன்ன ஒரு மாற்றம் பற்றியும் கூறியுள்ளார்.

Dhanush Kara
அதில் பேசிய போது “நான் ஒரு செய்தித்தாளில் படித்த ஒரு விஷயத்தை வைத்து, இதனை `சூது கவ்வும்’ போன்ற ஒரு படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பின்னர் இன்னொரு செய்தி ஒன்றை படித்த போது, இந்த இரண்டையும் இணைத்து கதையாக்கினால் என்ன என்று ஒரு ஒன்லைனை யோசித்தேன். போர் தொழிலுக்கு பிறகு தனுஷ் சார் அழைத்து பேசினார். எனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனவும் கூறினார்.
நான் செய்தித்தாள்களில் படித்ததை வைத்து யோசித்த அந்த ஒன் லைன் இருந்தது. பின்பு அதை அவருக்கு ஏற்றது போல கதையாக்கினேன். அந்தக் கதையை கேட்டுவிட்டு, `இந்த பாத்திரம் மிக நெகடிவாக இருக்கிறதே உங்களுக்கு ஓக்கேவா, நான் எனக்காக என்று சொல்லவில்லை ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகாமல் போய்விடக்கூடாது. பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். பின்னர் அதையும் மனதில் வைத்து எழுதினோம், கதைக்கு மிகவும் அவர் சொன்னது உதவியது. அதன் பின் அவருக்கு கதை மிகவும் பிடித்தது, இனி எந்த ஹீரோயிசமும் வேண்டாம், கதையிலே ஹீரோயிசம் இருக்கிறது என்றார்.” எனப் பேசியுள்ளார் விக்னேஷ் ராஜா.
