ஆன் ஸ்க்ரீன் மட்டுமில்லாமல் ஆஃப் ஸ்க்ரீனிலும் இருக்கிற மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம். நிறைய Eye Opening, Revelations நிறைந்த பயணம்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை மஞ்சு வாரியார். இவர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அஜித்துடன் துணிவு, ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஆர்யா நடித்துள்ள `மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்வாக கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் மஞ்சு.
அந்நிகழ்வில் அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்ட மஞ்சு வாரியாரின் புகைப்படம் காட்டப்பட்டு, அது குறித்த அனுபவம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மஞ்சு “ஆன் ஸ்க்ரீன் மட்டுமில்லாமல் ஆஃப் ஸ்க்ரீனிலும் இருக்கிற மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம். நிறைய Eye Opening, Revelations நிறைந்த பயணம். இந்த ட்ரிப் முடிந்த பின்னர், திரும்பி போய் லைசென்ஸ் வாங்கி, பைக்கும் வாங்கிவிட்டேன்.

Manju
பயணம் என்பது வாழ்க்கையில் எல்லோரும் செய்ய வேண்டியது என நான் சொல்லு விரும்புகிறேன். பயணம் என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது அல்ல, முதலில் வீட்டிலிருந்து வெளியே வாருங்கள். உங்களை சுற்றியுள்ள வாழ்க்கையை கவனியுங்கள். அந்த அனுபவங்கள் மூலம் உங்களுக்கு உள்ளது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என புரிந்து கொள்வீர்கள். அது உங்களை தன்னடக்கம் மிக்கவராக மாற்றும், சாந்தப்படுத்தும்.” என்றார்.
