புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது.
Summary
புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருப்பதால், இந்நேரத்தில் வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று பங்கு சந்தை நிபுணர் அஜய் பக்கா கருத்து தெரிவிக்கிறார். அவர் இதுகுறித்து மேலும் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்
இந்தியப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்குவதற்கு முன்னதாக, சந்தை நிபுணர் அஜய் பக்கா வர்த்தகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர்கூறும்போது, “இது வர்த்தகம் செய்வதற்கான நேரம் அல்ல. முதலீடு செய்யுங்கள், உங்கள் ஒழுக்கத்தைக் கடைபிடியுங்கள். SIP வழிமுறையின் மூலம் மாதாந்திர முதலீடு செய்யுங்கள். இந்தச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்க முயற்சிக்காதீர்கள்” என்று வங்கி மற்றும் சந்தை நிபுணரான அஜய் பக்கா கூறினார். இன்று, சென்செக்ஸ் 2.08% சரிந்து 75,937.16 புள்ளிகளிலும், நிஃப்டி 50 1.92% சரிந்து 23,589.60 புள்ளிகளிலும் தொடங்கியது.

கச்சா எண்ணெய்Pt web
ஈரான் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டபோது, சந்தை போக்கில் நம்பிக்கை இருந்தது. ஆனால் அதன்பின்பு அது மாறிவிட்டது. ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ள கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வே, உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கான முதன்மையான கவலையாக உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட புதிய பதற்றங்களைத் தொடர்ந்து, இந்த அதிகரிப்பு நடந்துள்ளது. கடந்த ஆண்டு, கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட எரிசக்தி இறக்குமதிக்காக இந்தியா சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டது என்று பக்கா குறிப்பிட்டார். தற்போதைய விலை நிலவரங்களின்படி, அந்த ஆண்டுச் செலவு 225 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 250 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இடையூறு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றச் சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
செங்கடல் மற்றும் ஓமான் வளைகுடா வழியாகப் போக்குவரத்து தடைபடுவதால், இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் தடைகளைச் சந்தித்து வருவதாக பக்கா சுட்டிக்காட்டினார். இந்திய சந்தைகளிலும், உலகளாவிய சந்தைகளிலும் எச்சரிக்கையாக இருங்கள். தற்போது உங்கள் மூலதனத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மிகக் குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு இது நேரமல்ல. ஏனெனில், அவ்வாறு செய்வது சரிந்து கொண்டிருக்கும் பங்குகளை வாங்குவதாக அமைந்து, உங்களுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டு அவரின் எச்சரிக்கை வந்துள்ளது.
